ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட் டை, சென்னை-14.
தரமான இந்திய மொழிப் படங்களைப் பற்றி இந்தப் புத்தகம் அருமையான தகவல்களைக் தருகிறது. சத்தியஜித்ரே, நிமாய்கோஷ், சாந்தாராம், பிமல் ராய், ஷியாம் பெனகல், பாலுமகேந்திரா, மிருணாள் சென், மகேந்திரன், ஜெயகாந்தன், கிரிஷ் கார்னாட், ஜான் ஆப்ரஹாம், மணிரத்னம், கே.பாலசந்தர், பாரதிராஜா -ஆகிய சினிமா படைப்பாளிகளைப் பற்றி விரிவாகச் சொல்லிச் செல்கிறார். இந்தியத் திரைப்படங்களில் தொழிற்சங்கப் போராட்டங்கள், இந்தியப் பெண் இயக்குனர்கள், சினிமாவை ஊடுருவிய சமூகப் போர்வை, குழந்தைகள் சினிமா, இந்திய சினிமாவில் அரசியல் பார்வை -ஆகிய தலைப்புகளில் இவர் எழுதியிருக்கும் கட்டுரைகள், தகவல்கள் நிறைந்து மிகச்சிறப்பாக அமைந்துள்ளன. சினிமா பொக்கிஷம்!