பக்கங்கள்: 72
வெளியீடு: உயிர்மை பதி்ப்பகம், 11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை -18
பிரெஞ்சு ஆதிக்கத்துக்கு ஆட்பட்டியிருந்த புதுச்சேரி மாநிலம் சாராயத்துக்கும் மாட்டுக்கறிக் கும் பெயர் பெற்றது. பிரெஞ்சு நினைவுகள் அலைமோதும் கவிதைகள் வங்காள விரிகுடாவில் உப்புக் கரைப்பை உண்டவை. கொலைகாரன், பைத்தியக்காரன், பயங்கரவாதி, காமுகன், குடிகாரன், தெருப்பொறுக்கி எனப் பெயர் பெற்ற ஒருவனுக்குள்ளிருந்து வெளிப்படும் பலநூறு குரல்களின் பேய் கூச்சல்கள். அசூயை இன்றி என்னை வெட்டித்தின்ன முடியுமெனில் கொலை செய்ய வா என எதிரில் நிற்பவரை மூர்க்கமாக அழைக்கும் ஓர் ஆன்மீகவாதியின் அலறல்கள்.