எல்லோரையும் அரவணைத்துக்கொள்ளும், எல்லோரையும் சுண்டி இழுக்கும் வாழ்வியல் நெறி, பவுத்தம்.
பவுத்தம் கட்டளைகள் இடுவதில்லை. ஆலோசனைகள் மட்டுமே வழங்குகிறது. தான் வாழ்ந்த காலத்தில் பவுத்தம் என்னும் மதத்தை புத்தர் ஆரம்பிக்கவில்லை. அவருக்குப் பின்னால் வந்தவர்கள் தோற்றுவித்த மதம் அது. விதி என்று எதுவும் கிடையாது. மனிதர்களுக்கு அப்பாற்பட்ட சக்தி என்று எதுவும் கிடையாது. அறிவை நம்பு. பகுத்தறிவைப் பயன்படுத்து. எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதே. என் உபதேசங்கள் உள்பட. அனைத்தையும் கேள்வி கேள். புத்தரின் மேலான தத்துவம் இது.
நம்பிக்கையை மட்டும் அடிப்படையாகக் கொண்டு இயங்கிவரும் பிற மதங்களிடமிருந்து பவுத்தம் பெரிதும் வேறுபடுவது இந்த இடத்தில்தான்.