கிழக்கு பதிப்பகம், எண். 33/15, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை- 600 018; போன்: 044 4200 9601/ 03/ 04; Fax: 044 4300 9701; Email : Support.nhm.in | Website : www.nhm.in பக்கம் : 136
இதுவரை நீங்கள் ஒரு இன்ஷுரன்ஸ் பாலிசிகூட எடுக்கவில்லை என்றால், ஆயிரம் மீட்டர் உயரத்தில் கட்டப்பட்ட ஒரு மெல்லிய கயிற்றின் மீது நடந்து கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் அணிந்து கொள்வது எத்தனை முக்கியமோ அத்தனை முக்கியம் இன்ஷுரன்ஸ் எடுத்து வைத்துக்கொள்வது. என்ன பாலிசி எடுக்கலாம்? எவ்வளவுக்கு? எந்த பாலிசி நமக்கு லாபகரமானது? குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் பிரத்தியேக பாலிசிகள் இருக்கின்றனவா? ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை ஏன் ஒருவர் எடுக்க வேண்டும்? யாரோ சொன்னார்கள் எதையோ எடுத்தோம் அவ்வப்போது பணம் கட்டினோம் என்று இருந்துவிடாமல், இன்ஷுரன்ஸ் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம். ஆயுள் காப்பீடு பற்றி அடிப்படையாக உங்களுக்கு எழும் சந்தேகங்கள்
அனைத்தையும் இந்தப் புத்தகமே எழுப்பி,அதற்கான விடைகளையும் எளிமையாக அளிக்கிறது.