தொகுப்பு: எஸ்.அழகேசன், வே.நித்தியானந்தன், வெளியீடு: ஆசிரியர் நூற் பதிப்புக் கழகம், 360. அவிநாசி சாலை, பீளமேடு, கோயம் புத்தூர் (பக்கம்: 352, விலை: ரூ. 175).
ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு பற்றிய முழுமையான, விரிவான தொகுப்பு. 1896ம் ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்த நவீனகால முதல் ஒலிம்பிக் போட்டி முதல், கடந்த ஆண்டு ஏதென்ஸ் நகரில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டி வரை... விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒலிம்பிக் போட்டிகளின் வரலாறு, இதுவரை நடந்த 28 ஒலிம்பிக் போட்டிகள் பற்றிய குறிப்புகள், ஒவ்வொரு ஒலிம்பிக்கிலும் பங்கேற்ற நாடுகள், வீரர்களின் எண்ணிக்கை, விளையாட்டுப் பிரிவுகள், ஒவ்வொரு விளையாட்டிலும் பதக்கங்கள் வென்ற நாடுகள், வீரர்கள்... என தனித்தனியாக புள்ளி விவரங்கள் பக்கத்துக்குப் பக்கம் குவிந்து கிடக்கின்றன. மிக முழுமையான ஒலிம்பிக் தொகுப்பு இது. விளையாட்டு ஆர்வலர்கள் தவற விடக்கூடாத நூல்.