கிழக்குப் பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்: 144). ரூ.60
சினிமா என்னும் மிகப் பிரும்மாண்டமான கனவு உலகத்தின் இயக்கத்தையும் செயல்பாட்டையும் அநாயாசமாகக் காட்சிப்படுத்தும் நாவல், கøμந்த நிழல்கள். சினிமா உலகத்தில் தானாகவே உருவான சட்ட திட்டங்கள்; அந்தச் சட்ட திட்டங்களுக்குள் சிக்கிக் கொள்ளும் தயாரிப்பாளர்கள், ஸ்டுடியோ முதலாளிகள்,
டிஸ்ட்ரிபியூட்டர்கள், மேனேஜர்கள், இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், துணை நடிகர்கள் என்று
பல்வேறு தμப்பினரின் வாழ்க்கை பெரும்பாலும் சினிமாவைப்போல் வண்ணமயமாக மைந்துவிடுவதில்லை. திøμயில் பயிரிடும் கனவுகளுக்காக வாழ்வின் கனவுகளைச் சிதைத்து, உμமாக்கும் வர்க்கம் குறித்த இப்படியொரு யதார்த்தம் குலையாத நாவல் இதற்கு முன்னும் பின்னும் தமிழில் எழுதப்பட்டதில்லை.