ஸ்ரீ அன்னை மீனாட்சி பப்ளிகேஷன்ஸ், 38, நடேச அய்யர் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 160. விலை: ரூ.45)
மருத்துவம், வரலாறு, இலக்கியம், அறிவியல், விலங்குகள், தற்கால நிகழ்வுகள், தகவல் தொடர்பியல், ஆன்மிகம் என பல்வேறு துறைகளைத் தேர்வு செய்து அந்தத் துறைகளில் உள்ள பொது அறிவுக் கருத்துக்களைத் திரட்டித் தந்துள்ளது பாராட்டத்தக்கது.எந்த நல்ல காரியத்தையும் அஷ்டமி - நவமியில் செய்யக்கூடாது என்கின்றனர். இது ஏன்? ஜென்மாஷ்டமி (கிருஷ்ண ஜெயந்தி) ஸ்ரீ ராம நவமி (ராமன் பிறப்பு) ஆகிய முக்கிய பண்டிகைகளே. எனினும், இவ்விரு அவதாரங்களும் வாழ்வில் படாதபாடு பட்டனர்.
எனவே தான், அஷ்டமி - நவமி நல்ல நாளல்ல என்று கூறுகின்றனர்' என்று அஷ்டமி - நவமி நாட்கள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நூலாசிரியர். இவ்வாறு பல தகவல்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் கூறுகிறார். பொது அறிவுத் தொகுப்பு நூல்.