நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் சாலை (முதல் மாடி), தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192).
பத்திரிகையில் தொடராக எழுதிய 39 கட்டுரையின் தொகுப்பு தான் இந்த நூல். உலக இலக்கியங்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியவற்றிலிருந்து மேற்கோள்கள் எடுக்கப்பட்டு அவை கட்டுரையாக்கப்பட்டுள்ளன. கட்டுரையாளர் அப்துல்காதர் பேச்சாளர் என்பதால் அவரையும் அறியாமல் எழுத்து நடையை விட பேச்சு நடை கைகொடுத்திருப்பதைக் காண முடிகிறது. ஒவ்வொரு கட்டுரைக்கும் நூலாசிரியர் கொடுத்திருக்கும் தலைப்புகள் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன.அன்பே! அந்தக் கொசுவினைச்சாகடித்து விடாதே! அந்தக் கொசுமுதலில்உன்னைக் கடித்தது!