பதினேழு முறை இந்தியாவுக்குள் படையெடுத்த கஜினியில் ஆரம்பித்து பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட கடைசி முகலாய மன்னர் பகதூர்ஷா வரை...மதன் ஸ்டைலில் சொல்லப்பட்ட இந்த வரலாற்றுத் தொடரில் சூடு, சுவை, கோபம், கொந்தளிப்பு என்று நிஜங்களின் ஊர்வலம் சிலிர்க்க வைக்கிறது.'மதன் எனக்குச் சரித்திர ஆசிரியராக இருந்திருந்தால், நான் நூறு மார்க் வாங்கியிருப்பேன்' என்று பிரபல எழுத்தாளர் சுஜாதாவே பிரமித்திருக்கிறார்.