58 உலகக் கவிஞர்களின் கவிதைகளை ஒன்று சேர்க்கும் இந்தத் தொகுதி கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வியட்நாம் வரையிலான தேசங்களின் கவிஞர்களைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. இதில் பல கவிஞர்கள் முதல் முறையாகத் தமிழுக்கு அறிமுகமாகின்றனர்-எடுத்துக்காட்டாக ஜெரீமி க்ரோனின், ரியூச்சி தமுரா, அன்னா ஸ்விர். கனடா தேசத்துக் கவிஞரும் புனைகதையாளருமான மைக்கேல் ஓன்யாட்டே இந்தத் தொகுதியின் முக்கியக் கண்டுபிடிப்பாக அமைவது உறுதி. உலகளாவிய முன்னணிப் பெண் கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுதியில் இடம்பெறுவது மற்றொரு சிறம்பம்சமாகும். பாப்லோ நெரூடா மற்றும் ராபர்ட்டோ யூவாரோஸ் ஆகிய லத்தீன் அமெரிக்கக் கவிஞர்களின் படைப்புகள் பிரத்யேகமாக இந்த நூலுக்கான மொழிபெயர்க்கப்பட்டவை.