உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.
கு.அழகிரிசாமி கி. ராஜநாராயணனுக்கு எழுதிய கடிதங்களின் இத்தொகுப்பில் 1987ல் வெளிவந்த 'கு. அழகிரிசாமி கடிதங்கள்' தொகுப்பிலுள்ள 27 கடிதங்களுடன் இதுவரை வெளிவராத 41 கடிதங்களும் இடம்பெறுகின்றன. நேசத்தின் இடையறாத பெருக்கு கொண்ட இக்கடிதங்கள் இசை, இலக்கியம், அன்றாட வாழ்வின் தத்தளிப்புகள் என விரிந்து கு.அழகிரிசாமியின் ஆளுமை குறித்து மிகச் சிறந்த ஆவணமாகத் திகழ்கின்றன.