பல்வேறு காலகட்டங்களில் எழுதப்பட்ட கவிதைகள் இவை. பாலினம், தேசம், காலகட்டம் இவற்றில் இருக்கும் வேறுபாடுகளால் பாதிக்கப்படாத ஒரே குரலில் பேசுபவை. தனிமையின் குரல் அது. சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டதன் விளைவாக, அல்லது சமூகத்தை விட்டுத்தான் விலகிச்செல்ல முடிவெடுத்தன் காரணமாக உருவான தனிமை அல்ல. இயற்கையை, தோன்றி இருந்து மறையும் தனது இயல்பைத் தன்னிச்சையாய் எதிர்கொள்ளும் உயிர்ப்பொருளின் தனிமை. எதன் மீதும் புகாரற்ற, எதையும் நிராகரிக்காத தனிமை. எனவே அடங்கிய குரலில் பேசுகின்றன.