புழு, பூச்சி, தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள், விலங்குகள், பறவைகள், மனிதர்கள் என முழுக்க முழுக்க உயிர்களால் நிரப்பப்பட்ட உலகம் இது. உயிர்கள் எப்படித் தோன்றின? ஒரே ஒரு செல்லுடன் தோன்றிய உயிர் எப்படிப் படிப்படியாக வளர்ச்சி பெற்றது? தாவரங்களுக்கும் விலங்குகளுக்கும் மனிதர்களுக்கும் உயிர் ஒன்றுதானா? பரிணாம வளர்ச்சி என்றால் என்ன? குரங்கிலிருந்து பிறந்த மனிதன் மீண்டும் என்னவாக மாறுவான்? ஆண், பெண் என்று இரு பிரிவுகள் உருவானது எப்படி? முழுக்க முழுக்க ஆச்சரியங்களும் அதிசயங்களும் நிறைந்த ஒரு புதிய உலகத்துக்குள் நீங்கள் இப்போது பிரவேசிக்கப்போகிறீர்கள். இங்கே நீங்கள் தேடப்போவது உங்களைத்தான்.