கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.ரூ. 80
நேருவின் மகள் என்னும் சாந்தமான அடையாளத்துடன் அறிமுகமானவர் இந்திரா. நாளடைவில் அவர் ஆளுமை சிறிது சிறிதாக வெளிப்பட்டபோது ஆச்சரியத்துடன் சேர்ந்து பதற்றமும் பயமும் கட்சியினரைத் தொற்றிக்கொண்டது. லட்சத்தில் ஒருவராக கட்சிக்குள் அவர் கரைந்துவிடுவார் என்று கணித்த விமரிசகர்கள் இந்திராவின் பிரம்மாண்டத்தைக் கண்டு பதுங்கிப் பின்வாங்கினார்கள். ஒவ்வொரு தடுமாற்றத்தையும் ஒவ்வொரு தோல்வியையும் தனக்குச் சாதகமாகப் பயன் படுத்திக்கொள்ளத் தெரிந்ததால் தான் அத்தனை எதிர்ப்புகளையும் மீறி இந்திராவால் மீண்டும் ஜொலிக்க முடிந்தது. தோல்வியை ஒப்புக்கொள்ள மாட்டேன் என்று தீர்மானமாக முடிவு செய்துகொண்டு ஜெயித்துக்காட்டியவர் அவர். பொது வாழ்க்கையில் மட்டுமல்ல தனி வாழ்க்கையிலும் இந்திரா சர்ச்சைக்குரியவரே. இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமர் இந்திரா காந்தியின் இரும்பு வாழ்க்கை விறுவிறுப்பான நடையில்.