கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
நானக் என்னும் சீக்கிய குருவால் தோற்றுவிக்கப்பட்ட மதம் இது. ஸ்ரீ குரு கிரந்த சாஹிப் என்கிற புனித நூலே இம்மதத்தின் அடிப்படைகளை விவரிக்கிறது. சீக்கியர்கள் வணங்குவதும் இதனைத்தான். குரு நானக் ஓர் இறைத்தூதர். தனது தரிசனங்களை அவர் எவ்வாறு மக்களிடம் எடுத்துச் சென்றார்? எப்படி சீக்கிய மதத்தைப் பரப்பினார்? சீக்கியர்கள் சரித்திரம் நெடுகிலும் பட்ட கஷ்டங்கள் என்னென்ன? அனைத்தையும் மீறி அம்மதம் எப்படித் தழைத்தது? குரு நானக்குக்குப் பிறகு சீக்கிய மதத்தின் தலைவர்களாக இருந்த பத்து குருமார்கள் யார்? அவர்களின் பங்களிப்பு என்ன? விரிவாக விளக்குகிறது இந்நூல்.