கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
ஆண்மைக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது? ஆண்மைக் குறைபாடு இருக்கிறது என்பதை எப்படி கண்டறிவது? ஆண்மைக் குறைபாடு உள்ளவர்கள் உடனடி- யாகச் செய்யவேண்டியது என்ன? ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையைத் தூண்டுவது எப்படி? ஆண்மைக் குறைபாட்டைத் தீர்ப்பதற்கான நவீன சிகிச்சை முறைகள் என்னென்ன? விந்தில் உயிரணுக்கள் குறைவதற்கான காரணம் என்ன? - இப்படி ஆண்மைக் குறைபாடு தொடர்பாக எழும் அனைத்துவிதமான சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறது இந்தப் புத்தகம். நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், பாலியல் மருத்துவத்தில் இந்தியாவிலேயே முதன்- முதலாக முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் தான் இயக்குநராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தை- யின்மையைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். இவர்,
ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் ஏசியா - ஓஸியானிக் ஃபெடரேஷன் ஆஃப் செக்ஸாலஜி என்ற அமைப்பின் துணைத் தலைவராக உள்ளார்.