கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604, பக்கம் : 80
யுவான் சுவாங்குக்கு முன்னால் சீனாவிலிருந்து இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டவர் ஃபாஹியான்.
புத்தரின் வாழ்க்கையை, அவரது நெறி முறைகளை முழுமையாக அறிந்துகொள்வதற்காக, கி.பி. நான்காம் நூற்றாண்டில் ஃபாஹியான் ஒரு பயணம் மேற்கொண்டார். உலக சரித்திரத்தை மாற்றியமைத்த மிக முக்கியப் பயணங்களுள் ஒன்றாக அது இன்றளவும் கருதப்படுகிறது. புத்தரை சீனாவுக்கு அறிமுகம் செய்ததன் மூலம் சீனாவின் கலாசாரத்தை, பண்பாட்டை, மத நம்பிக்கைகளை ஒரு புதிய திசையில் செலுத்தினார் ஃபாஹியான். ஃபாஹியான் அடிச்சுவட்டில் உங்களை அழைத்துச்செல்லும் இந்தப் புத்தகம் ஓர் உன்னதமான பயண அனுபவத்தை உங்களுக்கு வழங்கப்போகிறது.