கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
வாயை அகலத் திறந்துகொண்டு பூதம் போல் பயமுறுத்தும் ஆங்கிலம். நினைவில் தங்காத கணிதச் சமன்பாடுகள். இம்சிக்கும் இலக்கணம். பிறகு, அறிவியல், வரலாறு, புவியியல், அல்ஜீப்ரா, ஜியாமெட்ரி. அப்பப்பா, எல்லாவற்றையும் கடந்து கரையேறுவது எப்படி? எதை வாசித்தாலும் உடனுக்குடன் மறந்துவிடுகிறது. தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் கடகடவென்று ஒப்பிப்பதற்கு ஏதாவது வழி உண்டா? சாதனையாளர்களின் அடிப்படைப் பண்புகள் என்னென்ன? அவற்றைக் கடைப்பிடித்தால் நம்மாலும் சாதித்துக் காட்ட முடியுமா?