கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
சிறந்த மருத்துவ சிகிச்சையைப் பெறுவதற்கு, ஒவ்வொரு சராசரி மனிதரும் தெரிந்துகொள்ள வேண்டிய அடிப்படையான தகவல்களைத்திரட்டித் தருகிறது இந்தப் புத்தகம். மருத்துவமனை நடைமுறைகளையும், சிகிச்சையளிக்கும் மருத்துவரின் "மர்மமான' செயல்பாடுகளையும் கண்டு, இனி நீங்கள் மலங்க மலங்க விழிக்க வேண்டிய அவசியமில்லை; பயப்பட வேண்டிய தேவையும் இல்லை. மருத்துவமனை, சிகிச்சை என்று "புரிபடாத' மருத்துவ உலகத்தை நன்றாகப் புரிந்துகொண்ட "புத்திசாலி' நபராக உங்களை இந்தப் புத்தகம் மாற்றும் என்பது உறுதி. சிகிச்சைக்காக மருத்துவரிடமோ, மருத்துவ- மனைக்கோ செல்லும்போது, உங்களுடைய பிரச்னை என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்னென்ன? எவ்வளவு நாளில் குணமாகலாம்? என்பது உள்ளிட்ட உங்கள் மனத்தில் ஏற்படும் ஏராளமான சந்தேகங்- களுக்கு சரியான பதில்களை மருத்துவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும் வகையில் உங்களைத் தயார்ப்படுத்தும் ஒரு முயற்சிதான் இந்தப் புத்தகம்.