கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
நூலாசிரியர் டாக்டர் ஷாலினி, மன நல மருத்துவத்தில் முதுநிலைப் பட்டமும், மகளிர் மனநலம் குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டமும் பெற்றவர். 'மனநல சேவை மற்றும் ஆராய்ச்சி மையம்' என்ற அமைப்பை நடத்தி வரும் இவர், "மைண்ட் ஃபோகஸ்' என்ற நிறுவனத்தின் மூலம், மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சிகளை அளிக்கிறார். செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கும் ஆலோசனை
வழங்குகிறார். சுயஇன்பப் பழக்கத்தால் நரம்புத் தளர்ச்சி ஏற்படுமா? சிலருக்கு ஹோமோசெக்ஸில் அதிகநாட்டம் ஏற்படுவது ஏன்? ஆண் உறுப்பு சிறியதாக இருந்தால் மனைவியைத் திருப்திப் படுத்த முடியுமா? தூக்கத்தில் விந்து வெளியேறுவது ஏன்? மாதவிலக்கின் போது உடலுறவு கொள்ளலாமா? மனைவியின் உச்சக்கட்டத்தை எப்படி அறிந்து கொள்வது? ஒரு வாரத்துக்கு எத்தனை முறை உறவு வைத்துக் கொள்ளலாம்? - இவை மட்டுமா? செக்ஸ் தொடர்பாக நமக்குள்தான் எத்தனை எத்தனை கேள்விகள்; சந்தேகங்கள்; உட நம்பிக்கைகள். அவற்றைö யல்லாம் தெளிவாகத் தீர்த்து வைக்கிறது இந்தப் புத்தகம்.