கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இரு என்று ஒரு பழமொழி உண்டு. சாணக்கியம் என்றால் ராஜதந்திμம் என்றே பொருளாகிவிட்டது. இந்தியாவில் தோன்றிய மிகப்பெரிய ராஜதந்திரிகளுள் சாணக்கியர் முதன்மையானவர். சந்திரகுப்த மௌரியரா சரித்திரப் புத்தகங்களில் சந்தித்திருப்போம். அவரா உருவாக்கிய சூத்திரதாரி சாணக்கியர்தான்.எளிய அந்தண குலத்தில் பிறந்த சாணக்கியர், தமது புத்திசாலித்தனத்தின் மூலமே மாபெரும் சாம்ராஜ்ஜியத்தைப் படைத்து, காத்து, வளர்த்தவர். மிகச் சிறந்த கல்விமான். ராஜதந்திரி. தேச நலன் ஒன்றையே தம் மூச்சாகக் கொண்டவர். அவரது திகைப்பூட்டும் வீர வாழ்க்கையை விறுவிறுப்பாக விவரிக்கிறது இந்நூல்.