'சக மார்க்கம்' என்று சொல்லப்படுகிற தோழமை நெறியைச் சார்ந்தது இவரது பக்தி. இறைவனை தோழனாக பாவித்து, தனக்கு வேண்டியவற்றையெல்லாம் கேட்டுப்பெற்ற பெருமையுடையவர். ஆட்கொள்ளவந்த இறைவனை பித்தன் என்று ஏசி, பின் அதையே முதலடியாக 'பித்தா பிறைசூடி பெருமானே' என்று தேவாரப் பதிகம் பாடிய அருளாளர். தமிழ் வளர்த்தவர். அறம் விதைத்தவர். தர்மம் காத்தவர். இசை பாடியவர். இறைவனைக் கண்டவர்..
இசை பாடி,இறைவனைக் கண்ட நால்வர்கள் பற்றி - சொற்பொழிவு ஆற்றியவர்கள் : பருத்தியூர் கே. சந்தானராமன், திருமதி ஹேமா சந்தானராமன்