கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
மனிதனுடைய உடலில், சுவாச மண்டலத்-துக்கு அடுத்து மிக முக்கியமானது ஜீரண மண்டலம். இந்த ஜீரண மண்டலத்தின் மிக முக்கியமான உறுப்புகள் எல்லாம் சங்கமம் ஆகியிருக்கும் வயிறு பற்றிய அனைத்துத் தகவல்களும் இந்த நூலில் உள்ளன. சாதாரண வயிற்று வலி முதல் விக்கல், ஏப்பம், அல்சர், மஞ்சள் காமாலை, அப்பென்டிசைட்டிஸ் உள்ளிட்ட பல பிரச்னைகள் வரை, விரிவாகவும் அதே நேரத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையிலும் சொல்லப்பட்டிருக்கிறது. நூல் ஆசிரியர் டாக்டர் ஜே.எஸ். ராஜ்குமார், 1985-ம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்று 32 தங்கப் பதக்கங்-களுடன் வெளியே வந்தவர். கேஸ்ட்ரோ--என்ட்ராலஜி என்று சொல்லப்படும் ஜீரண மண்டலம் தொடர்பான சிறப்பு மருத்துவ மேல்படிப்பு படித்தவர். இந்தியாவில் இருக்கும் லாபரோஸ்கோபிக் அறுவை சிகிச்சை நிபுணர்களில் முக்கியமானவர்.