கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604. பக்கம் : 80
"எப்பப் பாரு டிவி இல்லன்னா கண்ட கண்ட பத்திரிக்கையைப் படிக்கிறது. உருப்புடுவியா நீ?' கண்டிக்கிறார் அம்மா. "இங்கல்லாம் உட்காரக்கூடாது, ஓடுங்கடா!' என்று அதட்டி விரட்டுகிறார் ஒரு தாத்தா. ஆழ்ந்து யோசித்தால்தான் அவர்கள் சொல்வதில் இருக்கும் நியாயம் புரியும். சமூகமும் ஊடகங்களும் மாணவர்களை எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்துகின்றன. அந்த நிகழ்வுகள் நல்லவித
மாகவும் மோசமாகவும் மாணவர்களைப்பாதிக்கின்றன. ஆழ்ந்து யோசித்தால்தான் எது நல்லது, எது கெட்டது, எதைச்செய்வது, எதைச் செய்யக்கூடாது என்பதுபுரியும். இன்றைய மாணவர்களின் எதிர்காலம் மகத்தானதாக அமைய இந்நூல் ஒரு தொடக்கப்புள்ளி.