கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை600 018; தொலைபேசி: 0444200 9601, 4200 9603, 4200 9604
ஐ.சி.யு. என்ற வார்த்தையைச் சொன்னாலே பயப்படுபவர்கள்தான் அதிகம். ஆனால்,இதற்கு உள்ள மரியாதையே தனிதான். ஒரே வரியில் சொல்வதென்றால் அது உயிர் காக்கும் உன்னதக் கூடம். ஹார்ட் அட்டாக், தலையில் ஏற்படும் பயங்கரமான காயம், கிட்னி ஃபெயிலியர், தற்கொலை கேஸ் இப்படி மிக மோசமான நிலையில் கொண்டு வருபவர்களை மட்டும் சேர்த்துக் கொள்வார்கள். இதற்குள் போக வேண்டுமென்றால் நோயாளி யாகத்தான் போக வேண்டும். எல்லாரும் பார்த்துவிட முடியுமா? அங்கு அப்படி என்னதான் செய்கிறார்கள்? ஐ.சி.யு.வின் உள்ளே நடக்கும் சின்னச் சின்ன விஷயங்களையும் தெளிவாக எல்லோருக்கு ம் புரியும் வகையில் சொல்லியிருக்கிறார் டாக்டர் என். ராமகிருஷ்ணன். அப்பல்லோ மருத்துவ மனையின் தீவிர சிகிச்சைப் பிரிவின் இயக்குநரான இவர், பத்து ஆண்டுகள்
அமெரிக்காவில் பணியாற்றியவர்.