பக்கம் : 112
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604.
நகரத்தைக் கண்ணாலம் கட்டிக்கிட்டு கிராமங்கள் செட்டில் ஆகிவிட்டன. மிராசுதார ரின் புடுபுடு புல்லட் சத்தம், நாட்டாமையின் மரத்தடி தீர்ப்பு எல்லாம் குறைந்தே போய் விட்டன. எருமைவெட்டிபாளையத்தில் இன்டர்நெட் வந்துவிட்டது. அத்திப்பட்டு ஜனங்கள் அரேபியாவுக்கு வேலைக்குப் போகின்றனர். பூம்பூம் மாடுகள் செத்தே போய்விட்டன. அதனாலென்ன... மண்ணுக்கு மணம் போய் விடுமா என்ன? குலதெய்வங்கள், கிராமங் களை விட்டுப் போகவில்லை. அமெரிக்காவில் லீவு போட்டுவிட்டு வந்து இங்கே குல தெய்வம் கோயிலில் மொட்டை போட்டுக்கொள்கிறான் கிராமத்து இளைஞன். ஊர் சாமிக்கு ஊறல் போட்டு சாராயம் சாய்க்கின்றனர். கள்ளும் சுருட்டும் படையல் பதார்த்தங்கள். வாருங்கள் கிராமத்துப் பக்கம்! குல தெய்வங் கள், கோயில்கள், வழிபாடு... ஒரு மாபெரும் கலாசாரத்தையே கண்முன் காட்டுகிறது இந்நூல்.