வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98.
நகை என்னும் சொல் சிரிப்பைக் குறிக்கும் மகிழ்ச்சியின் அடையாளம். மகிழ்ச்சியாக வாழ்கிறவர்கள் நீண்ட நாள் வாழலாம். தொல்காப்பியர் எட்டு வகை மெய்ப்பாடுகளைத் தமது தொல்காப்பியத்தில் கூறியுள்ளார். அவற்றில் அவர் முதலாவதாக நகை என்னும் மெய்ப்பாட்டையே வைத்துள்ளார். இதிலிருந்து நகைச்சுவைக்கு அவர் கொடுத்துள்ள முதன்மை தெளிவாகிறது. அந்த முதன்மை கொண்ட நகைச்சுவையைத் தமது நூலின் முதல் கட்டுரை ஆக்கியுள்ளார் நூலாசிரியர்.இலக்கியத்தின் பழமையான வடிவம் வாய்மொழி இலக்கியம் ஆகும். இன்றும் அந்த வாய்மொழி வடிவமாக விளங்குவது நாட்டுப்புற இலக்கியங்கள். நாட்டுப்புற இலக்கியங்கள் மனிதனின் வாழ்வை உள்ளது உள்ளபடி தெரிவிக்கின்றன என்பதை இந்த நூலில் தெளிவுப்படுத்தியுள்ளார்.இலக்கியத்தின் ஒவ்வொரு பகுதியையும் படிக்க வேண்டும் என்னும் எண்ணம் கொண்டவர்களுக்கு அவர்களின் ஆவலை நிறைவேற்றுவதாக இந்த நூலில் உள்ள பத்துக் கட்டுரைகளும் விளங்குகின்றன.