க.தி. அருள்மன்றம், வகுளமாலிகா, மாருதிநகர், மதுராந்தகம்-603306. (பக்கம்: 148)
பத்தொன்பது கட்டுரைகளின் தொகுப்பாக உள்ள இந்நூலில், ராமாயணம் குறித்து பெரும்பாலான கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையின் தலைப்பே, நூலின் பெயராக விளங்குகிறது. பேச்சாற்றல் மிக்க இந்நூலாசிரியர், தம் எழுத்தாற்றலையும் இந்நூல் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார்.கும்பகர்ணன் உறங்கவில்லை என்ற முதல் கட்டுரையில் "ஆசில் பரதாரம்' என்று தொடங்கும் கம்பரின் பாடலை நன்கு விளக்கியுள்ளதும் (பக்.2), கும்பகர்ணன், வீடணன் இருவரும் முறையே வாழைப்பழம், திராட்சைப்பழம் போன்றவர்கள் என்று ஒப்பிடுவதும் (பக்.4). மூக்கில்லாத தவளும் இடையில்லாதவளும் என்ற கட்டுரையில் கம்பனின் நகைச்சுவையை விளக்குவதும் (பக்.32, 33), இராமபிரானின் சிறப்பை எண்ணி சீதை அழுவதை விளக்குவதும் (பக்.79), நூலாசிரியரின் ஆழ்ந்த புலமைக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும். படிக்கத்தக்க பயனுள்ள நூல்.