'முத்துராமனின் கவலைகள் நிஜமானவை. அவை விசேஷ சுயத்தோற்றம் கொள்ள வேண்டுமென கோஷமிடச் செய்வதில்லை. அப்படியே உருகி வழியவும் தூண்டுவதில்லை.
மனித வாழ்க்கையில் மிகச் சில தருணங்கள் தவிர, மற்ற நேரமெல்லாம் எல்லோருமே சிறு சிறு கவலைகளிலும் சிறுசிறு அக்கறைகளிலும்தான் ஆழ்ந்திருக்கிறோம். முத்துராமனின் படைப்புகள் அதைத்தான் சொற்களில் வடித்துத் தருகின்றன.
இத்தொகுப்பிலுள்ள கதைகள், ஓர் எழுத்தாளனின் விரிந்து வரும் பார்வைக்கு அடையாளமாக உள்ளன. இந்த இளம் எழுத்தாளரிடம் தமிழ் வாசகர்கள் எதிர்பார்க்க நிறையவே இருக்கிறது.
- அசோகமித்தினின் முன்னுரையிலிருந்து.'