சீனிக் கற்கண்டாக இனிக்கும் தேவனின்\nபதினெட்டு சிறுகதைகள் நூல் வடிவில் இதோ!
\nடாக்டர், திருடன், காதலன், காதலி, பில்\nகலெக்டர் என்று இவர் எடுத்துக்கொள்ளும்\nகேரக்டர்கள் அனைவரும் மிக மிகச் சாதாரணமானவர்கள். ஆனால், தேவனின் பேனாவுக்குள்\nஒருமுறை புகுந்து வெளியே வரும்போது,\nஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக\nஜொலிக்கிறார்கள்.
\nமணிமணியாக மின்னும் அத்தனை கதைகளையும் நகைச்சுவை என்னும் பிரமாதமான\nஇழையில் கோத்திருக்கிறார் தேவன்.
\nகாலத்தைக் கடந்து நிற்கும் எழுத்தாளராக\nதேவன் நீடிப்பது ஏன் என்பதற்கான\nவிடைகளுள் இந்நூல் முக்கியமானது.