தொகுப்பு ஆசிரியர்கள்: டாக்டர் எம்.அருணாசலம், டாக்டர் ஏ.ஜான் பிரிட்டோ, டாக்டர் எஸ்.எம்.ஜான் கென்னடி, வெளியீடு: எஸ்.கே., வைகறை பப்ளிஷிங் ஹவுஸ், திண்டுக்கல் - 624 001. போன்: 2430 464.
உலகளாவிய அளவில் கடல், நிலம் மக்கள் தொடர்பாக நடைபெற்ற கருத்தாய்வின் 35 கட்டுரைகள் இந்நூலில் இடம் பெறுகின்றன. சமூகத்தாரை சாப்பிட்ட சமுத்திரமே மறுவாழ்விற்கான புகலிடம் என்று கடற்கரையோடு வாழ்ந்து வருவோரைப் பற்றியும் அவர்களது மேம்பாட்டுக்கும் சமூக பிரக்ஞையை விழிப்புணர்த்துகிறது இந்நூல்.
சுனாமியில் சங்கமமானவரின் அடுத்த தலைமுறையினருக்கும், தப்பிப் பிழைத்தோருக்கும் தேவையான நிவாரணப் பணி, சட்ட உதவி, கல்வி, மருத்துவ உதவி, ஆறுதல் கூறுதல், கலாசார மறுவாழ்வு என்று பற்பல நோக்குகளில் கருத்துக்கள்- ஆலோசனைகள், மனிதாபிமான தனிநபர் செய்ய வேண்டிய சேவை, இவை தொடர்பான அனுபவ உண்மைகள், நாசமான நாகப்பட்டின மதிப்பீடு (பக்.143), பேரழிவு அலையின் பாதிப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என ஆய்வடங்கலாக அமைந்திருக்கிறது.
படங்கள், திட்ட மதிப்பு, புள்ளி விவரங்கள், ஆதாரங்கள் நூலுக்கு அணி சேர்க்கின்றன.