கல்கி (விலை ரூ.90-00) முகப்பு அட்டையில் நெல்லை காந்திமதியம்மன் அழகுத் திருமேனி மலரின் கம்பீரத்தை உயர்த்துகிறது. பக்தியை வளர்க்கும் நெல்லையப்பர் மண்ணை சுப்ர பாலன் அழகாக விளக்குகிறார். பொதிகையில் ஈசன் நின்ற இடம் என்பதால், அது சுத்தமான இடம் அல்லவா? வேதாவின் படங்கள் அருமை.
காஞ்சி அன்னையின் வண்ணப் படம், காஞ்சி மாமுனிவர் விநாயகர் பற்றி ஆங்கிலம் கலந்த வாசகங்களுடன் விளக்கும் சிறப்பு, மண்ணில் நல்ல வண்ணம் வாழ வழிகாட்டும் காஞ்சித்தலம், அதன் பெருமைகளை விளக்கும் நாகை முகுந்தனின் தகவல்கள், ஓவியர் தனுசுவின் ஓவியங்கள் மனதை மகிழ்விக்கின்றன.
குற்றம் குறை இல்லாதது "அபங்கம்' என்ற சீதாரவி விளக்கம், ஜம்புகேஸ்வரரை வழிபட்டால் வராத பத்தி, புத்தி வரும் என்ற அறிவு ஒளியின் விளக்கம், இறைவன் இறைவி படத்தை உருவாக்கிய தனுசு ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன. காளகத்தி ஈசனைப்பற்றிய ப்ரியன் கட்டுரை, ஸ்ரீ முத்துசாமி தீட்சிதர் பாடிய நவ ஆவரண விளக்கங்கள், அவர் <உதிர்த்த "சிவே பாஹி' என்ற வார்த்தையின் பொருளை நீலகண்டன் விளக்கியிருப்பதும், எஸ்.ராஜத்தின் ஓவியத்தில் அவை உயிர்பெற்றிருப்பதும் இம்மலருக்கு வாசனை தருகிறது.
கொனார்க் பற்றிய வண்ணப்படத் தகவல், பாரத ரத்னம் எம்.எஸ். அமரர் கல்கியின் கட்டுரை ஆகியவையும் உள்ளன.
குமாஸ்தா மேஜை அருகே அமர்ந்து செயல்படும் தோட்டா தரணி, புதுமைப் பித்தன் நூற்றாண்டை ஒட்டி எழுதப்பட்ட கருத்தோவியம், என்று பக்கத்திற்குப் பக்கம் சிறப்பாக அமைந்திருக்கிறது. நாம் வல்லரசாக கிருஷ்ணராஜ வாணவராயர், ஹரிகதை பற்றிய தகவல், சிவகங்கை வேலுநாச்சியார் வீரம் பற்றி கவுதம நீலாம்பரன் எழுத்தோவியம், மங்கயைர், சிறுவர்களைக் கவரும் படைப்புகள் என்று மலர் சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஒரு தினத்தின் வர்ணனையை நான்கு ஓவியர்கள் காட்டும் வண்ணம், கவிஞர்கள் படைப்புகள், நேர்த்தியான அச்சு எல்லாமே அழகு தரும் வண்ண மலராக உருவாகக் காரணமாக உள்ளன.