மஞ்சரி (விலை ரூ. 35-00) வேதத்தில் விண்மீண்கள், கணக்குச் சக்ரவர்த்தி கம்பன், சாமான்யனும் பக்தி செய்ய ஸ்ரீ கிருஷ்ணப் பிரேமி காட்டும் வழி என்று மலர் அழுத்தமாகத் துவங்குகிறது.
அதில் ஆறு ஆண்டுகள் இடைவெளி குறைகிறது. சாயாக் கோபுரமாக நிற்கும் பசும்பொன் தேவர் பண்புகள், பௌத்த மற்றும் ஜைன இலக்கியங்களில் ராமகாதை, ஆகியவை சிந்தனையைத் தூண்டுபவை. அறிவியல், நகைச்சுவை, மஞ்சரியின் முன்னாள் ஆசிரியர்களின் படைப்புகள், மராட்டியம், மலையாளம், தெலுங்குக் கதைகள் மஞ்சரியின் தனி முத்திரைகள். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகம் தந்த கொடை உட்பட பல அருமையான படைப்புகள் கொண்டது இந்த மலர்.