பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம் மேற்கு தெரு, மயிலாப்பூர், சென்னை-4. (பக்கம்: 400).
"கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்' என்பது ஆன்றோர் வாக்கு. குவலயமே போற்றிக் கொண்டாடத்தக்க கீதையை உபதேசித்த கண்ண பிரானின் அருட்சரிதத்தை மிக அழகிய தமிழ் நடையில், எளிமையாகவும், விவரச் செறிவுடனும் தொகுத்து எழுதியுள்ளார் நாகர்கோவில் கிருஷ்ணன். நவமணி மாலை போன்ற மகாபாரத காவியம் முழுக்க ஒரு பொற்சரடு போன்று இலங்குபவன் ஸ்ரீகிருஷ்ணன். பரந்தாமனின் திவ்ய சரிதத்தையும், மகாபாரத சம்பவங்களையும் மிகச் சரியான கண்ணோட்டத்தில், தெளிவுபட எடுத்துரைப்பதில் பதினெண் புராணங்களிலும் நீந்தித் திளைத்த ஆசிரியரின் அனுபவச் சிறப்பு நன்கு அடித்தளமாய் அமைந்துள்ளது. ராம சரிதத்தை எவ்வாறு பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்வது வழக்கமோ, அவ்வாறே பரந்தாமன் உலவும் இப்பாண்டவ சரிதத்தையும் தர்மர் பட்டாபிஷேகத்துடன் நிறைவு செய்திருப்பது தனிச்சிறப்பு. ஸ்ரீகிருஷ்ணரின் லீலா மதுரமான இந்நூலை வாசிப்பவர்கள் பாக்கியவான்கள்.