தென்றல் பதிப்பகம், எண்.11, இரண்டாம் அடுக்கு, இந்திப் பிரசார சபா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 464. விலை: ரூ.125).
சுற்றுச்சூழல் கல்வி மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், பொதுமக்களுக்கும் இன்றியமையாதது. சுற்றுச்சூழல் கேடுகளின் இன்றைய நாளில் காரண கர்த்தா பெரிதும் மனிதரே!
ஐகோர்ட்டுகள், சுப்ரீம் கோர்ட் மனித உரிமைகளைக் காப்பது போலவே, இன்று சுற்றுச்சூழல் காப்பதிலும் பெரும் பங்கு வகிக்கின்றன. அறத்தை நிலை நிறுத்தவதோடல்லாமல், சுற்றுச்சூழல் கேடுகளைத் தடுக்க அவை அறம் உரைத்துள்ளன.
எங்கும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு, புதிய வேகம் பெறக் காண்கிறோம்.
சுற்றுச்சூழல் குறித்து விளக்கமாகவும், தெளிவாகவும் இந்த நூல் எடுத்துரைக்கிறது!