நிவேதிதா பதிப்பகம், 1, 3வது மாடி, புதூர் 13வது தெரு, அசோக்நகர், சென்னை-83. (பக்கம்: 304)
ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் கதை, திரைக் கதை, வசனம் எழுதி, "சாத னை நாயகர்' பட்டத்தைப் பெற்றவர் ஆரூர்தாஸ். தன் கலை உலக அனுபவங்களை, சுவைபட இந்த நூலில் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர்., படங்களுக்கும், சிவாஜி படங்களுக்கும் வசனம் எழுத நேர்ந்த அனுபவங்கள் தமிழ் திரை உலகில் முதன் முதலில் முத்திரை பொறித்த இளங்கோவன் பற்றிய தகவல்கள், எம்.கே.டி.பாகவதர் படங்களில் இடம்பெற்ற பாடல்கள், சிந்தாமணி படத்தின் சிறப்பு, எம்.எஸ்.சுப்புலட்சுமி, எம்.எல்.வசந்த குமாரி பற்றிய செய்திகள், "கன்னடத்துக் கிளி' சரோஜா தேவி பற்றிய சுவையான தகவல்கள், தஞ்சை ராமையாதாஸ் வரலாறு, இசைஞானி இளையராஜாவின் சாதனைகள் என்று பல தகவல்களைத் தருகிறார் ஆரூர் தாஸ். சினிமாப் பொக்கிஷம்! நடந்து வந்திருக்கிறது (பக்.13).
சுவாமி விவேகானந்தரின் நெடிய சிந்தனையை விளக்கும் இந்த நூல், பொருளாதார, சமூகச் சிக்கல்களை ஆராய்ந்து ஒரு முடிவையும் கூறுகிறது. விழித்திருங்கள்! எழுந்திருங்கள்! பின்தங்கியவர்களை உயர்த்தும் தொண்டில் ஈடுபடுங்கள்! இறைவன் உங்களுக்கு அருள் செய்வான் என்று முடிக்கிறார்.