நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152).
திருமூலர் கயிலையில் இருந்து சிவயோகியராய் தென் திசை புறப்பட்டு வந்தபோது வழிபட்ட தலங்கள் ஒன்பது. திருமந்திர நூலின் பெயர் சுட்டிக் கூறப்படும் தலங்கள் ஏழு. பெயர் சுட்டப்படாமல் தலத்தோடு தொடர்புடைய செய்திகளால் உணர்த்தப்படும் தலங்கள் 16. திருமூலர் வழிபட்ட இத்தலங்கள் பற்றி விவரிக்கும்போது அத்தலங்கள் திருமுறைகளில் எவ்வாறு பாடப்பட்டுள்ளன. அருணகிரியார் போன்ற அருளாளர்கள் எவ்விதம் பாடியுள்ளனர் என்று மேற்கோள்காட்டி விளக்கியுள்ளார் ஆசிரியர். இத்துடன் தல புராணங்களிலிருந்து புராணச் சம்பவங்களையும் கோர்த்துத் தந்திருக்கிறார். சைவ சமய இலக்கியப் பிரியர்களுக்கு அருமையான விருந்து இந்த நூல்.