அவதாரங்களில் - தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம்.
'நாளை என்பதே நரசிம்மனுக்குக் கிடையாது!'அதாவது கண நேர அவதாரம். தூணிலிருந்து வெளிப்பட்டார், அதர்மத்தை அழித்து தர்மத்தைக் காத்தார்.
இந்த அவதாரம் சொல்லும் சேதி, - நினைத்த அடுத்த நாழிகையில் நம் குறைகள் தீர்க்கப்படும் என்பதே!
அஹோபிலத்தில் உக்கிர நரசிம்மர்.
சோளிங்கரில் யோக நரசிம்மர்.
சென்னை மறைமலைநகரில் லக்ஷ்மி நரசிம்மர்.
அடேங்கப்பா! எத்தனை எத்தனை நரசிம்மர்கள்., இந்த நூலில் பாரத தேசமெங்கும் இருக்கும் நரசிம்மர் திருத்தலங்கள் அடையாளம் காட்டப்பட்டு, நெஞ்சில் அருள்சுரக்க வைக்கிறது.
'உக்ரம் வீரம் மகாவிஷ்ணும் ஜ்வலந்தம் ஸர்வதோமுகம் ந்ருஸிம்மம் பீஷணம் பத்ரம் ம்ருத்யு ம்ருத்யும் நமாம்யஹம்'
- நெருக்கடிக் காலங்களில் இதைப் பாராயணம்செய்து பாருங்கள்!
இந்த 'மருந்து' உடனே வேலை செய்வதைஉணர்வீர்கள்!