ஓர் ஏழைக் கிழவன் கோலம். ஒடிசலான தேகம், கூர்மையான நாசி. கோடி சூரியப் பிரகாசமாக அந்த விழிகள் அருள்பாலித்த அற்புதங்களை ஆயுள் முழுதும் அல்லவா அசைபோடலாம். வழிகாட்டும் தந்தையாக, பரிவு காட்டும் தாயுமானவனாக, குழந்தைகளுக்குப் பிடித்த கற்கண்டு தாத்தாவாக - அடடா! பரமேஸ்வரனே எடுத்த அவதாரமல்லவா அது! 'பெரியவா' என்று ஜகமே அழைத்த காஞ்சி மகானுக்கும் தனக்கும் ஏற்பட்ட நெருக்கத்தையெயல்லாம் உருக்கமாகச் சொல்லி, நம் நெஞ்சங்களை எல்லாம் உருகவைக்கிறார் பரணீதரன். நூல் ஆசிரியர் பரணீதரன் மிகப்பெரும் பத்திரிகையாளர், நாடக ஆசிரியர், கார்ட்டூனிஸ்ட். ஆனந்த விகடனில் பணியாற்றிய போது, லட்சக்கணக்கான வாசகர்களைத் தன் எழுதும் திறமையால் சொக்கவைத்தவர். பெரியவாளின் நிழலில் இருந்ததை பிறவிப்பயன் என்கிறார்.