பெண் இல்லையென்றால் பிறவிகள் ஏது? வாழ்க்கை ஏது? உலகம் ஏது? பெண்தான் சக்தி! ஆனாலும், இவ்வுலகில் அவள் எதிர்கொள்ளும் துன்பங்கள்தான் எத்தனை எத்தனை?
இது சாமான்ய பெண்களுக்குத்தான் என்றில்லை; இறைவிக்கும் நேர்ந்ததுதான்! தந்தை தட்சன் ஒருபுறம், கணவன் பரமேஸ்வரன் மறுபுறம் என பார்வதி தேவியே படாதபாடு பட்டுப்போய் தன் இன்னுயிரையே தியாகம் செய்துவிடவில்லையா? அன்று தேவி பராசக்தி நடத்திய அந்தத் திருவிளையாடல்தான் புண்ணிய பாரதத்தில் சக்தி பீடங்கள் தோன்றக் காரணமாக அமைந்தது. தட்சன் யாகம் காரணமாக இறந்துபோன சதி பார்வதியைச் சுமந்தபடி சிவபெருமான் தன் உடுக்கையை அடித்துக் கொண்டு உலகம் முழுவதும் சுற்றி வந்தபோது உடுக்கையிலிருந்து ‘அ’ முதல் ‘க்ஷ’ வரை 51 அட்சரங்கள் தோன்றின. 51 சக்தி பீடங்களின் வரலாறு, அவை அமைந்துள்ள இடங்கள், அந்தத் திருத்தலத்தின் பெருமைகள் என அனைத்தும் இடம்பெற்றுள்ள இந்நூலை, சிலிர்ப்பூட்டும் நடையில் எழுதியிருக்கிறார் நூலாசிரியர் திருமதி ரஞ்சனா பாலசுப்ரமணியன்