விசா பப்ளி கேஷன்ஸ், 16, வெங்கட் நாராயணா சாலை, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 152).
கட்டுரை எழுதுவது சுஜாதாவுக்கு பிடித்த விஷயம். அதேபோல, அவர் கட்டுரைகளைப் படிப்பதும், வாசகர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். இந்தத் தொகுப்பில், மொத்தம் 28 கட்டுரைகள் உள்ளன. இதில் விமர்சனம், நேர்காணல், யோசனை என பல உதிரிப் பிரிவுகளும் அடக்கம். எது எப்படி இருந்தாலும், சுஜாதாவின் எழுத்தில் சுவைக்கும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமே இருக்காது. வீரப்ப மொய்லி கர்நாடக மாநில முதல்வராக பொறுப்பேற்றவுடன், சுஜாதா ஒரு நேர்காணல் கண்டு பதிவு செய்துள்ள விஷயம் இன்றைய மறுவாசிப்பில் சுவை கூடியிருப்பதை உணர முடிகிறது.