பொழுது புலர்கிறது! உலகமே துயில் நீங்கி விழித்தெழுகிறது! எல்லாப் பிராணி-களும் புத்துயிர் பெறுகின்றன. புள்ளினங்கள் கூட்டிலிருந்து பறந்தோடுகின்றன. பிராணிகள் துள்ளிக் குதிக்கின்றன. மனிதர்கள் உற்சாகமாக காலைக் கடன்களை முடித்து, தத்தம் அலுவல்களைக் கவனிக்கிறார்கள். இவையெல்லாம் எதனால் சாத்தியமா-கின்றன? சூரியன் உதிப்பதால்தான்!
சூரியனின் பெருமை,சூரிய கிரகணத்தின்-போது நன்கு விளங்கும். கிரகண சமயத்தில் பறவைகள் நிசப்தமாக மரங்களில் அமர்ந்திருக்கும். விலங்குகள் அசைவற்று அவை இருக்குமிடத்திலேயே நின்றுகொண்டு இருக்கும். கண்களுக்குத் தீங்கு நேரிடும் என்ற பயத்தில் மக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பார்கள். கர்ப்பிணிப் பெண்கள் வெளியே தலைகாட்டமாட்டார்கள். இப்படியாக, அந்தக் குறிப்பிட்ட சமயத்தில் உலகமே ஸ்தம்பித்திருக்கும். இந்தக் காரியங்களுக்கு எல்லாம் காரணம் இல்லாமலா? ஆதிகாலம் முதல் இன்றுவரை நாம் தெய்வமாகப் போற்றி வழிபடும் ஆதவனைப் பற்றிய அத்தனை தகவல்களையும் நீங்கள் இந்நூலில் அறியப்போகிறீர்கள்.