கேரள சமுதாயத்தை, சாதிய வெறுப்பிலிருந்தும் அடிமைத்தனத்திலிருந்தும் விடுவிக்கப் போராடிய ஆன்மிக ஞானி, ஸ்ரீ நாராயணகுரு.
மேல் சாதியினரால் ஆலயப் பிரவேசம் மறுக்கப்பட்டு, ஆலயக் கருவறைக்குள் செல்வதற்கு தங்களுக்குத் தகுதியில்லை என்று ஒடுங்கிக்கிடந்த மக்களுக்கு நாராயணகுரு அளித்த தன்னம்பிக்கை சாதாரணமானதல்ல!
சாதிமத பேதமில்லாமல் மக்கள் அனைவரும் வந்து செல்வதற்கான கோயில்களை உருவாக்கியவர். குல வழிபாட்டு முறையை ஒழித்துக்கட்டி,அனைவரும் பொது இடத்தில் கூடி வழிபடும்படியாக கடவுள்களை நிறுவினார் நாராயணகுரு.
அந்த ஆலயங்களில், தீண்டப்படாதவர்களையே பூஜைகள் செய்யவைத்தார். அக்கோயில்களுக்கான பூஜை மந்திரங்களையும் அவரே உருவாக்கித் தந்தார். -நாராயணகுரு ஆன்மிகம் மட்டுமல்லாமல் கல்வித்துறையிலும் சாதனைகள் நிகழ்த்தினார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் படிப்பாளிகளாக மாறியதற்கும், பொதுவாக கேரளத்தின் கல்விநிலையே புரட்சிகரமாக மாறியதற்கும் காரணம் நாராயணகுருவே!'ஒரு சாதி, ஒரு மதம், ஒரு தெய்வம் மனிதனுக்கு!' என்று உபதேசித்த மகானின் வியப்பூட்டக்கூடிய வாழ்க்கை சரிதத்தைப் பற்றி, எளிய தமிழில் பேசுகிறது இந்நூல்.