மகாகவி காளிதாசனை இன்னும் பல நூற்றாண்டுகளுக்கும் பேச வைக்கப்போவது ரகுவம்சம்.
எல்லா காலத்தினரும் அனுபவித்துப் படிக்கும்அளவுக்கு காவிய ருசியைப் பிழிந்திருக்கிறார் காளிதாசன்.
திலீபனின் தொண்டு, போர்முனையிலும் ஆட்சியிலும் வெளிப்படும் ரகுவின் திறமை, அஜனின் சுகமான காதல், அறநெறி கொண்ட ஸ்ரீராமனின் வெளிப்பாடு... அப்படியே படம் பிடிக்கிறார் அந்த மகாகவி.
நடையில் ஓர் எளிமை, அதைக் கையாள்கிற லாகவம், இயற்கையை வர்ணிப்பதில் ஓர் இனிமை. இப்படிப்பட்ட காளிதாசனிடம் காதல் கொண்டு, ரகுவம்சத்தை அப்படியே சுவை குன்றாமல் தமிழுக்குத் தந்திருக்கிறார் நூல் ஆசிரியர் அ.வெ.சுப்பிரமணியன்.சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டும் இவருக்கு இரண்டு கண்கள்.