பசுபதி நிலையம், 21, லோகநாதன் 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 176).
சிறந்த எழுத்தாளர்களின் படைப்புகள் சாகித்ய அகடமியால் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டன. அவற்றில் பலவற்றை பின்னலூர் மு.விவேகானந்தன் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.இத்தொகுப்பில் ஒரியா, பஞ்சாபி, இந்தி, மராத்தி, ராஜஸ்தானி, ஜோத்புரி, மணிப்புரி, வங்காளி, மலையாளர், கன்னடம், அசாமி, உருது, தமிழ் ஆகிய 13 மொழிகள் சார்ந்த 24 கதைகள் இடம் பெற்றுள்ளன. இந்திய மண்ணின் பல்வேறு பிரதேசங்களின் சமூக வாழ்வியல் அனுபவங்களை ஒன்றாக ஓரிடத்தே தொகுத்து நோக்கி உணர்ந்து கொள்ளும் அனுபவ வாய்ப்பை இக்கதைகள் நமக்கு அளிக்கின்றன.மொழியாலும், மதத்தாலும், இனத்தாலும் வேறுபட்டிருந்தாலும் வறுமையும், துன்பமும், ஏக்கமும், இரக்கமும், பரிவும், பாசமும் அனைவருக்கும் பொது, அதேபோல சுரண்டலும், பித்தலாட்டமும் எல்லா சமூகங்களிலும் ஒரே மாதிரியாகத் தான் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை இக்கதைகள் ஊடாக உணர முடிகிறது. ஆசிரியரின் முயற்சிக்கு வாசகர்கள் ஆதரவு நிச்சயம் இருக்கும்.