அனைவரும் அறிந்த ராமன்; பலரும் அறியாத சாந்தா! அக்காவுக்கும் தம்பிக்கும் நடக்கும் ஒரு வாய்மொழி யுத்தம். தசரதனின் மகளாகப் பிறந்து, ஒரு மகரிஷியை மணந்து ரிஷிபத்தினியாக விளங்கிய சாந்தாவின் சரிதம். விறுவிறுப்பான நடையில் ஒரு காவியம். படிக்கும்போதே நாம் நைமிசாரண்யம், ரிஷிகேஷ், ஹரித்வார், பத்ரிகாச்ரமம் போன்ற இடங்களுக்குப் போனதாக ஓர் உணர்வு. கங்கையில் குளிக்கிறோம், யமுனையில் நனைகிறோம். மூலிகை வனங்களை சுவாசிக்கிறோம். படித்து முடித்ததும், சாந்தாராம் போல் சாந்தாவும் நம் மனத்தில் இடம்பிடித்து விடுகிறாள்.