சரிகமபதநி, 7/4, புஜங்கராவ் தெரு, சென்னை-15. (பக்கம்:280)
ராமாயணம் சரணாகதி சாத்தியம்! தியாகப் பிரம்மத்தின் கீர்த்தனைகள் சங்கீத சாத்திரம்! இசை மேதை டி.எஸ்.பார்த்தசாரதி தொகுத்த "ஸ்ரீதியாகராஜர் கீர்த்தனைகள் என்ற முதல் நூல், முழு நூலுக்குப் பிறகு, வெளிவந்துள்ள முதல் தரமான இரண்டாவது நூலிது. சங்கீதம் தெரியாதவர்கள் கூட, இதைப் படித்து விட்டால் ஆர்வம் பெறுவர். உதாரணத்திற்கு இதோ சில தகவல்கள்.
* தியாகராஜர் பாடிய 2,500 கீர்த்தனைகளில் கிடைத்தவை 700 மட்டும்.
* சங்கராபரணத்தில், 29 கீர்த்தனைகளும், தோடியில் 26, கல்யாணி, சாவேரியில் 19, பைரவி, சௌராஷ்டிரத்தில் 18, மத்ய மாவதியில் 15 என்று 208 ராகங்களில் 675 கிருதிகள் பாடியுள்ளார்.
* 100க்கும் மேற்பட்ட ராகங்களை சொந்தமாக அமைத்துள்ளார்.
*திருவையாறு, சீர்காழி, நாகை, சோளிங்கர், ஸ்ரீரங்கம், லால்குடி, திருமலை, கோவூர், திருவொற்றியூர், காஞ்சிபுரம் கோவில்களில் பாடியுள்ளார். சங்கீதக் கடலில் மூழ்கி எடுத்த முத்து மாலை இந்த சங்கீதக் களஞ்சிய நூல்.