சகுந்தலை, டி2/1, கைலாசபுரம், டவுன்ஷிப், திருச்சி - 620 014. பக்கம்:496)
சிறை, மீண்ட சொர்க்கம், செம்மீன், மோக முள், வேதம் புதிது, பாவ மன்னிப்பு, சில நேரங்களில் சில மனிதர்கள், பம்பாய், மேரா நாம் ஜோக்கர் போன்ற பல திரைப்படங்களை அலசி, அவை ஏற்படுத்தும் தாக்கத் தை விவரிக்கிறார் சந்திர போஸ். ஜாதிய அமைப்புகள், தீண்டாமைக் கொடுமைகள், மதத்தின் பெயரால் அராஜகம், பயங்கரவாதத்தின் பெயரால் அராஜகம், தனி மனித வன்முறைகள் போன்றவற்றிற்கு எதிராகக் குரல் கொடுக்கும் திரைப்படங்கள் குறித்துச் சிறப்பாக விவாதம் செய்கிறார். சமுதாயப் பிரக்ஞை உள்ள ஒரு ஆசிரியரின் கலை உலகப் பயணம். சினிமா விமர்சனப் பொக்கிஷம்.