ஸ்ரீ செண்பகா பதிப்பகம், தபால் பெட்டி எண்:8836, பாண்டி பஜார், சென்னை-600 017.(பக்கம்: 296)
மாக்ஸிம் கார்க்கி என்ற பெயரைக் கேட்டவுடன் அவரது "தாய் எனும் நாவல்தான் நமது நினைவில் தோன்றும். அந்த மாக்ஸிம் கார்க்கி தனது தாயின்
அரவணைப்பில் வாழவில்லை. தந்தை இறப்புக்குப் பிறகு அவர் வேறு ஒருவரைத் திருமணம் செய்து கொண்டதால் தனது பாட்டியிடம் வாழ்ந்துள்ளார் கார்க்கி. முறையான கல்வி இல்லாமல் இளவயது முதலே வேலைக்குப் போன கார்க்கி படிப் படியாகப் படித்து மிகப்பெரிய எழுத்தாளராகி ரஷ்யாவின் மிகப்பெரிய தலைவர் என்ற நிலைக்கு எவ்வாறு உயர்ந்தார் என்பதை இந்த நூல் தெளிவாக உணர்த்துகிறது.மாக்ஸிம் கார்க்கியின் சுயசரிதை நூல்களான "எனது குழந்தைப் பருவம், "யான் பெற்ற பயிற்சிகள், "யான் பயின்ற பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.