நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 192)
கிருஷ்ணாஜி என்றும், ஜே.கே.என்றும் சுருக்கமாகவும் அழைக்கப்படும் பிரபல தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளராகவும், சமையல் பணியாளராகவும் 40 ஆண்டுக்காலம் பணிபுரிந்தவர் இந்நூல் ஆசிரியர். உண்மையில் ஜே.கே., மதம், கடவுள், ஆன்மிகக் கருத்துக்கள் போன்ற எதிலும் நம்பிக்கை இல்லாதவர். அவரது சிந்தனைகள் தனித் தடத்தில் செல்பவை. அப்படிப்பட்டவருடன் தனக்கு ஏற்பட்ட பலவிதமான அனுபவங்கள், ஜே.கே.,யைக் காண வந்த பெரிய பெரிய வி.ஐ.பி.,க்கள் அவர்களுடனான இவரது அனுபவங்கள் ஆகியவற்றை மிகச் சுவையாகச் சொல்கிறார் ஆசிரியர்.
இது ஒரு சமையல் கலைப் புத்தகமும் கூட! கிருஷ்ணாஜிக்கும் அவரது பல விருந்தினர்களுக்கும் ஆசிரியர் தயாரித்துப் பரிமாறிய பல விதத் தின்பண்டங்கள், சமையல் அயிட்டங்கள் அவற்றின் தயாரிப்பு முறைகள் ஆகியவற்றை விரிவாக, மிகச் சுவையாகச் சொல்கிறார்! அன்பர்கள் அவற்றையும் செய்து பார்த்து ருசிக்கலாம்!